கம்ப்யூட்டர் தொழில்நுட்ப கோளாறால் நாடு முழுவதும் 200 விமானங்கள் ரத்து: 700 விமானங்கள் தாமதம்

புதுடெல்லி: நாட்டில் உள்ள பல்வேறு விமான நிலையங்களில் உள்ள கம்ப்யூட்டர்களில் நேற்று செயலிழப்பு ஏற்பட்டன. இதனால் செக்- இன் செயல்பாடுகளில் கடும் இடையூறுகள் ஏற்பட்டன. இதன் காரணமாக பல விமானங்கள் தாமதமாக புறப்பட்டதால் பயணிகள் சிரமத்திற்கு ஆளானார்கள்.செக்-இன் செயல்பாடுகளில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, ஏர் இந்தியா மட்டுமின்றி மற்றும் இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட், ஆகாஸா ஆகியவற்றின் சேவைகள் பாதிக்கப்பட்டன.

நேற்று மட்டும் 200க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதில் இண்டிகோவின் 200 விமானங்கள் அடங்கும். மேலும் 700 விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டன. விமான நிலைய வட்டாரங்கள் கூறுகையில்,‘‘ விமான பணியாளர்களுக்கு விமான பணி நேர கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு பின் இண்டிகோ நிறுவனம் போதுமான பணியாளர்கள் இன்றி விமானங்கள் ரத்து, தாமதம் போன்ற பிரச்னைகளை சந்தித்து வருகிறது என்றன. ஆனால் விமான நிலையங்களில் ஏற்படும் நெரிசல் மற்றும் தொழில்நுட்ப கோளாறுகளினால் விமானம் புறப்படுவதில் தாமதம் ஏற்படுவதாக இண்டிகோ செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

Related Stories: