கரூர் ஒன்றியத்தின் சார்பில் ஊராட்சி செயலர்கள் எழுச்சி தின கொண்டாட்டம்

 

வேலாயுதம்பாளையம், டிச.3: ஊராட்சி செயலர்களின் சார்பில் தொகுப்பூதிய பணி மாற்ற தினத்தை முன்னிட்டு முதியோர் இல்லத்தில் அன்னதானம் வழங்கினர்.
தமிழக முழுதும் ஊராட்சி செயலாளர்கள் பல ஆண்டு காலங்களாக குறைந்த சிறப்பு கால முறை தொகுப்பூதியத்தில் பணியாற்றி வந்தனர். கடந்த2018ம் ஆண்டு ஆக.30ம் தேதி ஊராட்சி செயலர்களின் வாழ்வில் ஒளிவிளக்கு ஏற்றும் வகையில் தொகுப்பூதிய பணியானர்களாக மாற்றும் அரசாணை வெளியிடப்பட்டது.

அந்நாளை ஒவ்வொரு வருடமும் ஊராட்சி செயலர்களின் எழுச்சி நாளாக தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் சார்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு கரூர் மாவட்ட கரூர் ஊராட்சி ஒன்றியத்தின் சார்பாக புன்னம் சத்திரம் சித்தார்த்தா முதியோர் இல்லத்தில் ஊராட்சி செயலர்களின் எழுச்சி நாளை முன்னிட்டு நேற்று மதியம் உணவு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் மாவ ட்ட தலைவர் பாலுசாமி, நிர்வாகிகள் ரமேஷ்,சுரேஷ், சசி குமார், ஈஸ்வரமூர்த்தி மூர்த்தி, செல்லமுத்து, ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்

Related Stories: