பெங்கால்மட்டம், ஒண்டிவீடு பகுதிகளில் பழுதடைந்து காட்சியளிக்கும் பயணியர் நிழற்குடைகள்

 

ஊட்டி, டிச.3: ஊட்டி அருகே பெங்கால்மட்டம் மற்றும் ஒண்டிவீடு பகுதியில் உள்ள பயணியர் நிழற்குடைகள் சேதமடைந்து காட்சியளிப்பதால் ெபாதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கிராமப்புறங்களுக்கு செல்லும் சாலைகளில் முக்கிய பகுதிகளில் பஸ்சிற்காக காத்திருக்கும் பயணிகளின் நலன் கருதி உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் பயணியர் நிழற்குடைகள் கட்டப்பட்டுள்ளன. இவற்றை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஊட்டி – மஞ்சூர் சாலையில் காத்தாடிமட்டம், ஒண்டிவீடு மற்றும் பெங்கால்மட்டம் பகுதியில் உள்ள பயணியர் நிழற்குடைகள் பராமரிப்பின்றியும், வாகனங்கள் மோதியதில் சேதமடைந்து மேற்கூரைகள் பெயர்ந்தும் காட்சியளிக்கின்றன. இதனால் இவற்றை பயன்படுத்த வேண்டாம் என எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் தற்போது மழை மற்றும் குளிரான காலநிலை நிலவி வரும் நிலையில் பழுதடைந்து காட்சியளிக்கும் இந்த நிழற்குடைகளை பயன்படுத்த முடியாமல் ெபாதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே ெபாதுமக்களின் நலன் கருதி பயணியர் நிழற்குடைகளை பராமரிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: