தொகுதி பங்கீடு காங்கிரஸ் குழு இன்று முதல்வருடன் சந்திப்பு

சென்னை: தமிழக சட்டப்பேரவை தேர்தல் பணிகளில் திமுக கூட்டணி வேகம் காட்டி வரும் நிலையில், திமுக- காங்கிரஸ் முதல்கட்ட தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்று தொடங்குகிறது. காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள் சூரஜ் எம்.என். ஹெக்டே, நிவேதித் ஆல்வா, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் ஆகிய 5 பேர் குழு இன்று பிற்பகல் 12.30 மணி அளவில் அண்ணா அறிவாலயத்தில் முதல்வரை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். அப்போது, காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை இடங்கள், எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து ஐவர் குழு விவாதிக்கிறது.

Related Stories: