வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 5 மாணவர்கள் உதவி தொகை பெற தகுதி தமிழ்மொழி இலக்கிய திறனறி தேர்வில்

வேலூர், டிச.3: தமிழ்மொழி இலக்கிய திறனறி தேர்வில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 5 மாணவர்கள் உதவி தொகை பெற தகுதி பெற்றுள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அரசு தேர்வுகள் துறை மூலமாக தமிழகத்தில் அனைத்து வகை பள்ளிகளில் பிளஸ் 1 மாணவ, மாணவிகளுக்கு தமிழ்மொழி இலக்கிய திறனறித்தேர்வு கடந்த அக்டோபர் 11ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, வேலூர் மாவட்டத்தில் 6 ஆயிரத்து 19 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத விண்ணப்பித்தனர். இவர்களுக்காக 25 தேர்வு மையங்களில் நடந்த தேர்வை 5 ஆயிரத்து 777 மாணவ, மாணவிகள் எழுதினர். 242 பேர் ஆப்சென்ட் ஆகினர். இத்தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது. இதில் 750 மாணவர்கள், 750 மாணவிகள் என 1,500 மாணவ, மாணவிகளுக்கு உதவித்தொகையாக மாதம் ரூ.1,500 வீதம் 2 ஆண்டுகளுக்கு வழங்கப்பட உள்ளது. இதில், வேலூர் தனியார் பள்ளி வர்ஷினி, அரசு பள்ளிகளில் படித்த மாணவிகள் பிரியதர்ஷினி, ராம், அன்புசெல்வன், ஜீவிதா ஆகிய 5 மாணவர்கள் உதவி தொகை பெற தகுதி பெற்றுள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: