அரியலூர், டிச. 1: வாகனங்கள் திரும்ப, பொதுமக்கள், கால்நடைகள் சாலையை கடக்க நெடுஞ்சாலையின் சென்டர் மீடியனை அகற்றி பாதை ஏற்படுத்தி தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரியலூர் செந்துறை நான்கு வழி சாலையில் நீண்ட தூரங்கள் இடைவெளி இல்லாமல் தொடர்ந்து அமைக்கப் பட்ட சென்டர் மீடியனால் பொதுமக்கள், கால்நடைகள் கடும் அவதி படுகின்றனர். லாரிகள், கார்கள், இரு சக்கர வாகனங்கள் எதிர் திசையில் ஓரங்களில் வந்து சாலையை கடப்பதால் அதிக விபத்துக்கள் நடக்கின்றன.
அரியலூருக்கும் செந்துறை இடையே புதிய நான்கு வழி நெடுஞ்சாலை அமைக்கப்பட்ட போது நீண்ட தூரங்கள் தொடர்ந்து இடைவெளி இல்லாமல் உயரமான சென்டர் மீடியன் அமைக்கப்பட்டதால் தங்கள் குடியிருக்கும் பகுதியில் அடிக்கடி சாலையை கடக்க வெகு தூரம் சென்று திரும்ப முடியாமல் கால்நடைகள், பொதுமக்கள் சென்டர் மீடியனில் ஏறி சாலையை கடக்கும் போதும், மேலும் அதே பகுதியில் வசிப்பவர்கள், தொழில், வியாபாரம் செய்பவர்கள் அதிக முறை இடது பக்கத்தில் இருந்து வெகு தூரம் சென்று சாலையில் திரும்ப வர வேண்டி அவல நிலை ஏற்பட்டு உள்ளதால்
இடது பக்க செல்ல வேண்டிய சாலையிலேயே எதிர் திசையில் லாரிகளில், கார்களில், இரு சக்கர வாகனங்களில் வந்து சாலையை கடப்பதால் அதிக விபத்துகள் நிகழ்கின்றன.
