கேரள முதல்வரின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் உள்ள கேரள முதல்வர் பினராயி விஜயனின் வீட்டில் இரட்டை குண்டுவெடிப்பு நடத்துவோம் என்று இமெயில் மூலம் வந்த மிரட்டலால் பரபரப்பு ஏற்பட்டது. கேரள முதல்வர் பினராயி விஜயனின் தனி செயலாளரின் இமெயிலுக்கு நேற்று ஒரு மெயில் வந்தது. அதில், திருவனந்தபுரம் நந்தன்கோட்டில் உள்ள கேரள முதல்வரின் அரசு இல்லத்தில் இரட்டை குண்டு வெடிப்பு நடத்துவோம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இம்முறை வீட்டில் உள்ள பொருட்களுக்கு சேதம் ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம் என்றும், எனவே வீட்டிலிருந்து அனைவரும் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் அந்த இமெயிலில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதேபோல திருவனந்தபுரம் நந்தன்கோடு மற்றும் தம்பானூரில் உள்ள சவுத் இந்தியன் வங்கியில் குண்டு வைத்திருப்பதாகவும் அந்த மெயிலில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதுகுறித்த தகவல் கிடைத்தவுடன் வெடிகுண்டு பிரிவு போலீசார் மோப்பநாய் உதவியுடன் முதல்வர் பினராயி விஜயனின் வீடு மற்றும் சவுத் இந்தியன் வங்கிக்கு சென்று பரிசோதனை நடத்தினர். ஆனால் பல மணிநேரம் சோதனை நடத்தியும் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை.

Related Stories: