நீலகிரி கலெக்டர் காரில் இருந்த பம்பர் அகற்றம்

ஊட்டி, ஜன. 12: சாலை விபத்துக்கள் ஏற்படும் பொது, வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள கிராஸ்கார்டு எனப்படும் எக்ஸ்ட்ரா பம்பர்களால் ஏர் பேக் திறப்பதில்லை. இதனால், விபத்து ஏற்படும் சமயங்களில் உயிரிழப்பு அதிகமாக ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள ஆர்டிஓ., அதிகாரிகள் தனியார் மற்றும் அரசு வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள இந்த கிராஸ் கார்டு எனப்படும் எக்ஸ்ட்ரா பம்பர்களை அகற்றி வருகின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான அரசு அதிகாரிகளின் வாகனங்களில் இந்த பம்பர்கள் அகற்றப்படாமல் உள்ளது. குறிப்பாக, கலெக்டரின் வாகனத்தில்  கிராஸ் கார்டு அகற்றப்படாமல் இருந்தது. கலெக்டர் வாகனத்தில் பம்பர் அகற்றப்படாமல் இருந்த நிலையில் மற்ற அரசு அதிகாரிகள் மற்றும் துணை கலெக்டர் நிலையிலான அதிகாரிகளும் அகற்றாமல் இருந்தனர். கடந்த 1ம் தேதி இது தொடர்பான செய்தி வெளியிடப்பட்டது. கலெக்டர் வாகனத்தில் பம்பர் அகற்றப்படாமல் இருந்த செய்தி மற்றும் படம் வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தனது வாகனத்தில் முன் பகுதியில் இருந்த பம்பரை அகற்றியுள்ளார். இதே போன்று மற்ற அதிகாரிகளும் பம்பர்களை அகற்ற முன்வர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories:

>