பிரம்மோஸ் ஏவுகணையை ஏந்தி செல்லும் ஐஎன்எஸ் தாராகிரி போர் கப்பல் இந்திய கடற்படையிடம் ஒப்படைப்பு

புதுடெல்லி: உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணையை கப்பலில் சுமந்து செல்லும் திறன் கொண்ட நீலகிரி வகுப்பின் (புராஜெக்ட் 17ஏ) நான்காவது கப்பலான தாராகிரி, இந்திய கடற்படைக்கு ஒப்படைக்கப்பட்டது. ஐஎன்எஸ் தாராகிரி என்பது இந்திய கடற்படையின் வழிகாட்டப்பட்ட ஏவுகணை போர் கப்பல்களில் ஒன்றாகும். இது இந்திய கடற்படைக்காக மும்பையில் உள்ள மசாகன் கப்பல் கட்டும் நிறுவனத்தால்(எம்டிஎல்) கட்டப்பட்டது.

இந்தத் திட்டத்தின் கீழ் மசகான் கப்பல் கட்டும் நிறுவனம் (எம்டிஎல் ) கட்டிய மூன்றாவது கப்பலான தாராகிரி நேற்றுமுன்தினம் ஒப்படைக்கப்பட்டது.கடந்த 11 மாதங்களில் இந்திய கடற்படைக்கு வழங்கப்படும் நான்காவது புராஜெக்ட் 17 ஏ போர் கப்பல் ஐஎன்எஸ் தாராகிரி ஆகும். இது பற்றி அதிகாரிஒருவர் கூறுகையில் போர்க்கப்பல் வடிவமைப்பு மற்றும் கட்டுமானத்தில் தன்னிறைவை அடைவதில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கிறது என்று தெரிவித்தார்.

Related Stories: