சூரிய கதிர்வீச்சால் விபத்து ஏற்பட வாய்ப்பு விமான பயணிகளை மிரட்டிய ஏ320 மென்பொருள் புதுப்பிப்பு

புதுடெல்லி: கடந்த அக்டோபர் 30ம் தேதி ஜெட் ப்ளூ நிறுவனத்தின் ஏ320 ரக விமானம் 35,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது, திடீரென 7 வினாடிகள் கட்டுப்பாட்டை இழந்து, 100 அடி கீழே இறங்கியது. அதிகப்படியான சூரிய கதிர்வீச்சால் விமான கட்டுப்பாட்டுகளுக்கான முக்கிய தரவு பாதிக்கப்பட்டிருப்பதாக கண்டறியப்பட்டது.

இவ்வாறு திடீரென கட்டுப்பாட்டை இழப்பது, அகமதாபாத்தில் விமானம் பறந்ததும் கீழே விழுந்து வெடித்து சிதறியது போன்ற விபத்துகளுக்கு வழிவகுக்க வாய்ப்புள்ளது. இதனால், ஏ320 ரக விமானங்களில் சாப்ட்வேர் புதுப்பிப்பை மேற்கொள்ள வேண்டுமென உலகளவில் விமான நிறுவனங்களுக்கு ஏர்பஸ் எச்சரிக்கை விடுத்தது. இதைத் தொடர்ந்து, இந்தியாவில் 338 ஏ320 ரக விமானங்களில் சாப்ட்வேர் புதுப்பிப்பு பணிகள் முடியும் வரையிலும் பறக்க விமான போக்குவரத்து இயக்குநரகம் தடை விதித்தது.

இதன் காரணமாக டெல்லி, மும்பை உள்ளிட்ட பல நகரங்களில் விமானங்கள் பல ரத்து செய்யப்பட்டன, அல்லது புறப்பட தாமதமாகின. இந்நிலையில், நேற்றைய நிலவரப்படி இந்தியாவில் 270 விமானங்களில் சாப்ட்வேர் புதுப்பிப்பு பணியை முடித்து விட்டதாக ஏர்பஸ் நிறுவனத்தின் கூறி உள்ளது. இப்பணி இன்றைக்குள் முழுமையாக முடிக் கப்பட்டு விடும் என தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் சுமார் 8000 விமானங்கள் ஏர்பஸ் ஏ320 ரகத்தை சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: