இம்பால்: மணிப்பூரில் கடந்த 2023ம் ஆண்டு வன்முறை வெடித்த பின், பெரும்பாலான மக்கள் வீடுகளை விட்டு நிவாரண முகாம்களில் தங்கி உள்ளனர். இந்நிலையில் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இயல்பு நிலை திரும்பியதால் மக்கள் தங்களது வீடுகளுக்கு திரும்பத் தொடங்கியுள்ளனர். பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக தங்களது கிராமங்களை நோக்கி வரத்தொடங்கி உள்ளனர்.
குவால்தாபியில் உள்ள வீடுகளை நோக்கி சென்ற மக்களை பாதுகாப்பு படை வீரர்கள் தடுத்து நிறுத்தினார்கள். இதன் காரணமாக இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. நிலைமை மோசமடைந்ததால் பாதுகாப்பு படையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசினார்கள். தொடர்ந்து பதற்றம் நிலவினாலும் நிலைமை கட்டுக்குள் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
