நேஷனல் ஹெரால்டு வழக்கில் ஈடி குற்றப்பத்திரிகை மீதான உத்தரவு டிச.16க்கு ஒத்திவைப்பு: டெல்லி நீதிமன்றம் அறிவிப்பு

புதுடெல்லி: நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை வெளியிடும் ஏஜேஎல் நிறுவனத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி இயக்குநர்களாக உள்ள ‘யங் இந்தியா’ தனியார் நிறுவனம் ரூ.90 கோடி கடன் கொடுத்தது. இந்த கடனுக்கு ஈடாக ஏஜெல் நிறுவனத்தின் 99.99 சதவீத பங்குகள் யங் இந்தியா நிறுவனத்திற்கு மாற்றப்பட்டது.

இதன் மூலம் ஏஜெல் நிறுவனத்தின் ரூ.2,000 கோடி மதிப்பிலான சொத்துக்கள் அபகரிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிட்ரோடா, துபே, சுனில் பண்டாரி, யங் இந்தியன் மற்றும் டோடெக்ஸ் மெர்ச்சண்டைஸ் பிரைவேட் லிமிடெட் ஆகியோர் சதி மற்றும் பணமோசடி செய்ததாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

இந்த வழக்கு டெல்லி ரோஸ் அவென்யு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. இதில், அமலாக்கத்துறையின் குற்றப்பத்திரிகையை பரிசீலிப்பது தொடர்பான உத்தரவு வரும் டிசம்பர் 16ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக சிறப்பு நீதிபதி விஷால் கோக்னே அறிவித்தார்.

Related Stories: