சென்னை: மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்எல்ஏ வெளியிட்ட அறிக்கை: டிசம்பர் 4ம் தேதிக்குள் பள்ளிவாசலை நிர்வாகம் செய்யும் முத்தவல்லிகள் மற்றும் வக்பு சொத்துகள் பற்றிய முதல்கட்ட விவரங்களை இந்த உமீட் போர்ட்டலில் பதிவு செய்ய வேண்டிய நிர்ப்பந்தமான நிலை ஏற்பட்டிருக்கிறது. வக்பை காப்பாற்றுவோம், அரசமைப்பைக் காப்பாற்றுவோம், இயக்கத்தின் சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் இப்னு சவூத் தலைமையில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளரை சந்தித்தோம்.
இதன் நீட்சியாக தமிழ்நாடு அரசு வக்பு சொத்துகளை விரைந்து ஆவணப்படுத்துவதற்கான ஒரு முன் முயற்சியை எடுத்திருக்கிறது. வக்பு குறித்த தகவல்களை முத்தவல்லிகள் பதிவு செய்வதற்கு உதவி மையங்கள் செயல்பட தொடங்கப்பட்டுள்ளது. இன்றிலிருந்து செயல்பட ஆரம்பிக்கும் இந்த உதவி மையங்கள் சனி ஞாயிறு விடுமுறை நாட்களிலும் செயலாற்றும்.
அங்கு உடனடியாக முத்தவல்லிகள் சென்று தகவல்கள் அளித்தால் உடனடியாகப் பதிவேற்றம் செய்யப்படும். இது தமிழ்நாடு அரசு செய்திருக்கக் கூடிய ஒரு முன் முயற்சி. நமது வக்பு சொத்துகளைப் பாதுகாப்பதற்கான முக்கியமான நடவடிக்கை இது. அதிமுக்கியமான இப்பணியை அதிவிரைவாக செய்வதற்கு முன் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
