கொல்லங்கோடு அருகே பெண் சாவில் சந்தேகம் தாய் பரபரப்பு புகார்

நித்திரவிளை, ஜன.11 : கொல்லங்கோடு அருகே நடைக்காவு ஒற்றப்பனைவிளையை சேர்ந்தவர் சுனில். சமையல் தொழிலாளி. இவரது மனைவி ஸ்மிதா (36). ஒரு மகளும், இரு மகன்களும் உள்ளனர். கணவன், மனைவிக்கு இடையே குடும்ப தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று முன் தினம்  மதியம் தனது வீட்டின் படுக்கை அறையில், ஸ்மிதா கருகிய நிலையில் சடலமாக கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் கொல்லங்கோடு போலீசார்  ஸ்மிதா, உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஸ்மிதா, தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக கணவர் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து ஸ்மிதாவின் தாயார், கொல்லங்கோடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், தனது மகள் ஸ்மிதாவை அவரது கணவரும், குடும்பத்தினர்களும் சந்தேகப்பட்டு துன்புறுத்தி வந்தனர். இந்த நிலையில் எனது மகள் படுக்கை அறையில் தீக்காயத்துடன் இறந்து கிடந்தார். அவரது சாவில் சந்ேதகம் உள்ளது  என கூறி உள்ளார். இதன் பேரில் கொல்லங்கோடு போலீசார் மர்ம சாவு என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஸ்மிதா, தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டு இருப்பாரா? பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே தெரிய வரும் என போலீசார் கூறினர்.

Related Stories:

>