சென்னை ஐகோர்ட் வக்கீல் கொலை; 1200 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்

தாராபுரம்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் முத்து நகரை சேர்ந்த ஐகோர்ட் வக்கீல் முருகானந்தம்ூ (35). இவரது சித்தப்பாவும் தனியார் மேல்நிலைப் பள்ளி தாளாளருமானவர் தண்டபாணி (65). சொத்து தகராறில் கடந்த ஜூலை மாதம் 28ம் தேதி தண்டபாணி ஏவிய கூலிப்படையால் பள்ளி வளாகம் அருகே முருகானந்தம் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, தண்டபாணி (65), அவரது மகன் கார்த்திக் (35) உட்பட 18 பேர் கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்த கொலை வழக்கில் 18 பேர் மீது 1200 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை போலீசார் நேற்று தாராபுரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அப்போது 18 பேருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது.

Related Stories: