சென்னை அமெரிக்க துணை தூதரகத்தில் எச்1பி விசா மோசடி? வரம்பு மீறி 2.2 லட்சம் விசாக்கள் வழங்கியதாக குற்றச்சாட்டு

வாஷிங்டன்: அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பை இந்தியர்கள் பறித்துக் கொள்வதாக கூறி எச்1பி விசாவுக்கான கட்டணத்தை டிரம்ப் அரசு கடுமையாக அதிகரித்துள்ளது. இந்த நிலையில், சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தில் வரம்பு மீறி அதிக அளவில் எச்1பி விசாக்கள் வழங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் முன்னாள் எம்.பி குற்றம்சாட்டி உள்ளார். அமெரிக்க முன்னாள் எம்.பி.யும் பொருளாதார வல்லுநருமான டேவ் ப்ரட் இது குறித்து கூறுகையில், , ”ஒவ்வொரு நாட்டிற்கும் அதிகபட்சமாக 85 ஆயிரம் எச்1பி விசாக்கள் மட்டுமே ஓராண்டுக்கு வழங்கப்பட வேண்டும் என்று உச்ச வரம்பு உள்ளது. ஆனால், இந்தியாவில் சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தில் மட்டும் கடந்த 2024ம் ஓரே ஆண்டில் 2.2 லட்சம் எச்1பி விசாக்கள் வழங்கப்பட்டுள்ளன. இது இந்தியாவுக்கு ஒதுக்கப்பட்ட விசாக்களைவிட இரண்டரை மடங்கு அதிகம். இதுதவிர எச்4 விசாக்கள் 1.40 லட்சம் பேருக்கு சென்னையில் வழங்கப்பட்டுள்ளது. இது எப்படி சாத்தியம்? எச்1பி விசா பெறுவதில் மிகப்பெரிய அளவில் மோசடி இந்தியாவில் நடந்து வருகிறது. அவர்கள் இதனை ஒரு தொழிலாகவே செய்கின்றனர் என்றார்.

Related Stories: