மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு இரட்டை மாட்டுவண்டி பந்தயம் காட்டாம்பூரில் களைகட்டியது

திருப்புத்தூர், ஜன.11: திருப்புத்தூர் அருகே காட்டாம்பூரில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடந்தது. மாட்டு வண்டி பந்தயத்தை திமுக மாவட்ட செயலாளர் கேஆர்.பெரியகருப்பன் எம்எல்ஏ  கொடியசைத்து துவக்கி வைத்தார். பெரியமாடு பிரிவில் 15 ஜோடிகள் பங்கேற்றன. அதில் திருப்புத்தூர் ராஜேஸ்கண்ணா மாடு முதல் பரிசையும், சிவகங்கை அருண் ஸ்டூடியோ 2வது பரிசையும், பல்லவராயன்பட்டி இளமாறன் 3வது பரிசையும், அம்மன்பேட்டை ராஜேஸ்வரி 4வது பரிசையும், பாண்டிகோவில் பாண்டியராஜன் 5வது இடத்தையும், குமணன்தொழு ரெவின் 6வது இடத்தையும் வென்றனர்.

சின்னமாடு பிரிவில் 33 ஜோடிகள் பங்கேற்றன. அதில் முதல் சுற்றில் தஞ்சாவூர் மாவட்டம் திருப்பன்துருத்தி வள்ளியம்மை முதல் இடத்தையும், கணக்கன்பட்டி சர்க்குரு 2வது இடத்தையும், குண்டேந்தல்பட்டி பவதாரணி 3வது இடத்தையும், பாதரக்குடி வளர்மதி மாடு 4வது இடத்தையும், நகரம்பட்டி கண்ணன் 5வது பரிசையும், டைம்பாஸ் குழுவினர் 6வது பரிசையும் வென்றனர். இரண்டாவது சுற்றில் திருப்புத்தூர் ராஜேஸ்கண்ணா மாடு முதல் இடத்தையும், அழகர்கோயில் கள்ளந்திரி நகுலன்சேதுபதி 2வது இடத்தையும், விராமதி சந்திரன் 3வது இடத்தையும், பூக்கொல்லை ரித்தீஸ்குமார் 4வது இடத்தையும், கண்டவராயன்பட்டி முரசு 5வது இடத்தையும், சிங்கினிப்பட்டி பெரியசாமி 6வது இடத்தையும் வென்றனர். வெற்றி பெற்ற காளைகளுக்கு வேட்டி, துண்டு அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் திருப்புத்தூர் திமுக தெற்கு ஒன்றிய செயலாளரும், யூனியன் சேர்மனுமான சண்முகவடிவேல் பரிசு வழங்கினார். 

Related Stories:

>