திருப்பூர் மாவட்டத்தில் 8 தொகுதிகளிலும் ஒரே நாளில் ஆய்வு செய்த தேர்தல் ஆணைய அதிகாரி: பொதுமக்கள் அதிருப்தி

திருப்பூர்: தமிழகம் உட்பட 12 மாநிலங்களில் எஸ் ஐ ஆர் எனும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணி தேர்தல் ஆணையத்தின் மூலமாக கடந்த நவம்பர் நான்காம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது தமிழகத்தை பொறுத்தவரை அனைத்து மாவட்டங்களில் உள்ள தொகுதிகளிலும் BLO மூலம், விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஒரு சில தொகுதிகளில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களும் பெறப்பட்டும் வருகிறது. இந்த எஸ் ஐ ஆர் சிறப்பு திருத்தத்தை பொருத்தவரை 2002 ஆம் ஆண்டு வாக்களித்த நபர்களின் பாகம் எண் மற்றும் வரிசையில் கேட்பதால் விண்ணப்பங்களை பூர்த்தி செய்வதில் பொதுமக்களிடையே பெருத்த குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது இதனால் பெரும்பாலான பகுதிகளில் விண்ணப்பங்களை எப்படி பூர்த்தி செய்வது என்பது என்று தெரியாமல் பொதுமக்கள் குழம்பி வரும் இலை நீடித்து வருகிறது.

திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இந்த எஸ் ஐ ஆர் சிறப்பு திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது அதிமுக மற்றும் பாஜக கட்சிகள் இந்த சிறப்பு திருத்தத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகிறது.

இந்த நிலையில் இந்திய தேர்தல் ஆணையத்தின் மூலம் அமைக்கப்பட்ட குழுவினர் தமிழகத்தில் இந்த சிறப்பு தீவிரப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளனர் இதன் ஒரு பகுதியாக இன்று திருப்பூர் வந்த தேர்தல் ஆணைய இயக்குனர் கிருஷ்ணகுமார் திவாரி, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மனிஷ், மாநகராட்சி ஆணையர் அமித் உள்ளிட்ட பலர் திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட எட்டு தொகுதிகளிலும் கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர் முதற்கட்டமாக அவிநாசி தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் கள ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள் தொடர்ந்து திருப்பூர் வடக்கு தொகுதியிலும் தெற்கு தொகுதியிலும் கள ஆய்வு மேற்கொள்ள வந்தனர் ஆனால், போகிற வழியில் ஒன்று இரண்டு இடங்களில் மட்டும் கள ஆய்விற்காக இறங்கி அதிகாரிகளிடம் மட்டும் விண்ணப்பங்கள் எவ்வளவு வழங்கப்பட்டுள்ளது எத்தனை விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டு திரும்ப பெற்றுள்ளது போன்ற விவரங்களை கேட்டுவிட்டு உடனடியாக அடுத்த இடங்களுக்கு சென்று விட்டனர் பொதுமக்களிடம் இதனால் என்ன குறைகள் உள்ளது பூர்த்தி செய்வதில் உள்ள இடர்பாடுகள் என்ன போன்றவை குறித்து எந்தவித கேள்வியும் கேட்கவில்லை.

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தியாகி பழனிச்சாமி காலனி மற்றும் கோம்பை தோட்டம் பகுதிகளில் சுமார் 1000க்கும் மேற்பட்டோரின் வாக்குகள் மாயமாக இருந்த சூழலில் அது தொடர்பாக அந்த பகுதிகளுக்கு சென்று எந்தவித கல ஆய்வுகளும் அதிகாரிகள் மேற்கொள்ளவில்லை. தொடர்ந்து மாநகராட்சி அலுவலகத்திற்குள் வந்து ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள் அதன் பின்னர் பல்லடம் தாலுகாவிற்கு ஆய்வு மேற்கொள்ள சென்று விட்டனர். எஸ் ஐ ஆர் பணிகளால் படிவங்களை நிரப்புவதில் ஏகப்பட்ட இடர்பாடுகள் குழப்பங்கள் நிலவி வரும் சூழலில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள வந்தால் தங்களது கேள்விகளுக்கு தீர்வு கிடைக்கும் என எதிர்பார்த்து இருந்த பொதுமக்களுக்கு இந்த ஆய்வு நடந்ததா என்பதை தெரியாத வகையில் நடத்தி முடிக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: