ராமேஸ்வரம்: தொடர் விடுமுறையை மையப்படுத்தி ராமேஸ்வரத்தில் தனியார் விடுதிகள், லாட்ஜ்கள், தங்கும் ஓட்டல்கள் சிண்டிகேட் அமைத்து இணையதளத்தில் மொத்த ரூம்களை லாக் செய்துவிட்டு நேரில் வரும் பக்தர்களிடம் ரூம் புல் என டிமாண்ட் ஏற்படுத்துவது ஒரு வாடிக்கையாக மாறிவிட்டது.
மேலும் அறைகளின் தங்கும் வாடகையை பன்மடங்கு உயர்த்தி புக் செய்கின்றனர். சாதாரண நாட்களில் ரூ.2 ஆயிரத்துக்கு வாடகை விடப்படும். டபுள் பெட் ஏசி ரூம் நேற்று ரூ.10 ஆயிரத்துக்கு வாடகைக்கு விடப்பட்டது. இதேபோல் தரத்திற்கு ஏற்றார்போல் அறைகள் வாடகை கட்டணத்தை பலமடங்கு உயர்த்தி வாடகைக்கு விடப்பட்டது.
மேலும் பெரும் லாப நோக்கத்திற்காக வழக்கமான 24 மணிநேர வாடகை நேரம் 12 மணிநேரமாக குறைக்கப்பட்டது. இதனால் குடும்பமாக வந்த சுற்றுலாப்பயணிகளும்,பக்தர்களும் வேறு வழியில்லாமல் கூடுதல் பணத்தை செலவிட்டு பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.
