விவசாயத்துக்கும் விவசாயிகளுக்கும் முன்னுரிமை அளித்து செயல்படுகிறது திராவிட மாடல் அரசு : முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை!!

திருவண்ணாமலை : விவசாயத்துக்கும் விவசாயிகளுக்கும் முன்னுரிமை அளித்து செயல்படுவதில் திராவிட மாடல் அரசு முன்னோடியாக உள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், “விவசாயிகள் தேடி அலையக்கூடாது என்பதற்காகத்தான் உங்களை தேடி வேளாண் கண்காட்சி அமைத்துள்ளோம். வேளாண் வணிக வாய்ப்புகளை கண்காட்சியில் விவசாயிகள் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாண்டு கனமழையால் ஏற்பட்ட பயிர் சேதங்களுக்கு விரைவில் நிவாரணத் தொகை வழங்கப்படும். பெரணமல்லூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு புதியதாக 500 மெ.டன் கொண்ட சிறப்பு கிடங்கு அமைக்கப்படும்,”இவ்வாறு தெரிவித்தார்.

Related Stories: