உடுமலை, நவ.25: உடுமலையை அடுத்துள்ள பூலாங்கிணறு அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ் இலக்கிய மன்றத்தின் சார்பில் தமிழ் கூடல் விழா நடைபெற்றது. பள்ளி உதவி தலைமை ஆசிரியர் ஜெகநாத ஆழ்வார் சாமி தலைமை தாங்கினார். கணித ஆசிரியர் ரமேஷ் முன்னிலை. வகித்தார். முதுகலை தமிழ் ஆசிரியர் சரவணன் வரவேற்றார். ராமச்சந்திராபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை தமிழாசிரியர் மருதமுத்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தமிழும் தன்னம்பிக்கையும் என்னும் தலைப்பில் தமிழ் இலக்கியங்கள் குறித்தும் சுய முயற்சியால் முன்னேறி அவர்கள் குறித்தும் சிறப்புரையாற்றினார். அதைத்தொடர்ந்து போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு இயற்பியல் ஆசிரியர் கணேச பாண்டியன் பரிசுகள் வழங்கினார். நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் ஜான் பாஷா நன்றி கூறினார்.
