எஸ்ஐஆர்… ஒண்ணுமே புரியலை மடச்சாம்பிராணியா இருக்கோம்: செல்லூர் ராஜூ புலம்பல்

 

மதுரை: எஸ்ஐஆர் கணக்கெடுப்புப் பணிகள் குறித்து அதிமுக மாஜி அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் அதிமுகவினர் நேற்று மதுரை கலெக்டரிடம் மனு அளித்தனர். பின்னர் செல்லூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது: எஸ்ஐஆர் பணிகள் மேற்கொள்ளும் வாக்குச்சாவடி அலுவலர்களில் 40 சதவீதம் பேர் தகுதியற்றவர்கள். மாநகராட்சி தூய்மைப்பணியாளர்கள், படிப்பறிவற்றவர்கள், அங்கன்வாடி ஆயாக்கள் உள்ளனர். நிறைய இடங்களுக்கு படிவம் போகவில்லை. கொடுத்த படிவம் நிரப்பி வருவது 35 முதல் 40 சதவீதத்திற்குள்தான் இருக்கிறது. காலம் குறைவாக இருக்கிறதே எப்படி நிவர்த்தி செய்வீர்கள் என்றால் உறுதியாக நிவர்த்தி செய்யப்படும் என்று கலெக்டர் தெரிவிக்கிறார்.

மதுரை மாவட்டத்தில் நடைபெற்று வரும் எஸ்ஐஆர் பணிகள் குறித்து எங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. அதில், நாங்கள் மடச்சாம்பிராணியாக இருக்கிறோம். ஒரு சில வாக்காளர்களை மட்டும் எடுத்து விட்டு அத்தனை வாக்காளர்களையும் வாக்காளர் பட்டியலில் பதிவேற்றம் செய்வதற்காக மாவட்ட நிர்வாகம் செயல்படுகிறதோ என்கிற அச்சம் வருகிறது. இவ்வாறு தெரிவித்தார்.‘எஸ்ஐஆர் கணக்கெடுப்பை ஆதரித்த நீங்கள், இந்த எஸ்ஐஆர் படிவத்தை இப்போது குறை சொல்கிறீர்களே?’ என்று கேட்டதற்கு, ‘‘அதிகாரிகள் எஸ்ஐஆர் படிவங்களை தேர்தல் அலுவலருக்கு கொடுத்ததைத்தான் எழுதியுள்ளோம் எனச் சொன்னால் பரவாயில்லை.

ஆனால், வாக்காளர்களுக்கு கொடுத்ததாக கூறுகிறார்கள். இது சந்தேகமாக இருக்கிறது. ஒரு தொகுதியில் உள்ள வாக்காளர் மற்றொரு தொகுதியில் இருப்பார் என்பதே சந்தேகம். தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவிப்போம்’’ என்றார்.

Related Stories: