வங்கிகளில் உள்ளூர் மொழி: கொல்கத்தா ஐகோர்ட் உத்தரவு

கொல்கத்தா: தேவையான ஆவணங்களை உள்ளூர் மொழி உட்பட மும்மொழிகளில் வெளியிட வேண்டும் என்ற ரிசர்வ் வங்கியின் சுற்றிறிக்கையை கடைபிடிப்பது தொடர்பாக அனைத்து வங்கிகளும் அறிக்கை தாக்கல் செய்ய கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் உள்ள அனைத்து வங்கி கிளைகளிலும் பிராந்திய மொழியான வங்காள மொழியை பயன்படுத்த உத்தரவிடக் கோரி பங்களா போக்கோ அறக்கட்டளை தாக்கல் செய்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மும்மொழியில் ஆவணங்களை வெளியிடுவதாக எஸ்பிஐ உள்ளிட்ட சில வங்கிகள் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளன.

Related Stories: