அரசு நிகழ்ச்சியில் வாக்குவாதம் கட்சி தொண்டருக்கு பளார் விட்ட காங். எம்எல்ஏ: கர்நாடகாவில் பரபரப்பு

சிக்கமகளூரு:வாக்குவாதத்தில் ஈடுபட்ட தனது கட்சி தொண்டரை அடித்த எம்எல்ஏவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சிக்கமகளூரு டவுன் தமிழ் காலனி பகுதியில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு புதிதாக ரோடுகள் அமைக்கும் பணிக்காக நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழாவில் எம்எல்ஏ தம்மையா கலந்து கொண்டார்.

அப்போது அங்கு வந்த எஸ்டிபி அமைப்பினர் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் எங்கள் பகுதிக்கு ரோடு போட வேண்டும் என கூறி ஒருவருக்கொருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். இதனால் அங்கு பெரிய அளவில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த எம்எல்ஏ தம்மையா, தனது கட்சியை சேர்ந்த ஒரு தொண்டரை அடித்து சமாதானப்படுத்தினார். இது தொடர்பான வீடியோ நான்கு நாட்களுக்குப் பிறகு இணையதளத்தில் வைரல் ஆகியுள்ளது.

Related Stories: