சென்னை: பாமக மகளிரணி சார்பில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான பரப்பரையை மேற்கொள்வது தொடர்பாக பசுமைத்தாயகம் அமைப்பின் தலைவர் சவுமியா அன்புமணி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நேற்று உத்தண்டியில் நடந்தது. இதில் சவுமியா அன்புமணி பேசியதாவது: தேர்தல் நெருங்கும்போது கடைசி நேரத்தில் சென்று மாம்பழத்திற்கு வாக்களியுங்கள் என்று கூறக் கூடாது. தர்மபுரியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது ஆண்கள் சரியாக வாக்களித்து விடுகின்றனர். பெண்கள்தான் கடைசி நேரத்தில் மனம் மாறி மாற்று கட்சிகளுக்கு வாக்களித்து விடுகின்றனர் என்று ஒரு சிறிய பெண் என்னிடம் கூறினார். தேர்தலுக்கு பின் வாக்குப்பதிவு நிலவரங்களை எடுத்து பார்த்தபோது அது உண்மை என்பது தெரியவந்தது. பல ஊர்களில் வாக்குகள் குறைவாக பதிவாகி இருந்த நிலையில் நிர்வாகிகளே அதிர்ச்சி அடைந்தனர். இவ்வாறு அவர் கூறினார்.
