விரைவில் இந்தியாவில் பொருளாதார நெருக்கடி ஏற்படும் அபாயம்.!! ராகுல் காந்தி எச்சரிக்கை

மேற்காசிய போரால் இந்தியாவில் பொருளாதார நெருக்கடி ஏற்படும் அபாயம் இருப்பதாக காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி எச்சரித்து உள்ளார். இந்தியாவின் பிரதமராக பதவி வகிக்கும் மோடியை அமெரிக்க நாட்டின் அதிபரான ட்ரம்ப் இயக்கி வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார் ராகுல் காந்தி.

மேற்காசிய போரால் நிலவும் பதற்றங்கள், வரவிருக்கும் நாட்களில் இந்தியர்கள் நேரடியாக எதிர்கொள்ள போகும் எரிபொருள் விலை உயர்வு மற்றும் பணவீக்கத்திற்கும் இடையே தொடர்பு இருப்பதாக குறிப்பிட்டு பேசி இருக்கும் மக்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்.பி-யுமான ராகுல் காந்தி, ஒரு “விரைவில் இந்தியாவில் நிதிசார் நிலநடுக்கம்” ஏற்பட வாய்ப்பிருப்பதாக எச்சரித்து உள்ளார்.

வளைகுடா பிராந்தியத்தில் தற்போது நிலவி வரும் சூழல் ஒரு “பேரழிவு” என்றும், இதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பது இன்னும் உறுதியற்ற நிலையில் இருப்பதாகவும் குறிப்பிட்டார். “மத்திய கிழக்கில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது நமக்கு தெரியும். அங்கு ஒரு பேரழிவு நிகழ்ந்துகொண்டிருக்கிறது, அது எங்கு சென்று முடியும் என்பது யாருக்கும் தெரியாது. இந்த நிலையில் தற்போதைய போர் சூழலின் தொடர் விளைவுகள் இந்தியா முழுவதும் உள்ள மக்களை நேரடியாகப் பாதிக்கும் என்று எச்சரித்தார்.

இன்னும் சில வாரங்களில் எரிபொருள் விலைகள் உயர கூடும், பணவீக்கம் அதிகரிக்க கூடும். இதன் காரணமாக “ஒரு பொருளாதார நிலநடுக்கம்” ஏற்பட போகிறது என்று ராகுல் காந்தி கூறினார். ஆனால் மோடி தலைமையிலான அரசால், கடும் விளவுகளை ஏற்படுத்த போகும் சூழலை நிச்சயமாக கையாள இயலாது என்று குற்றம் சாட்டி, மக்களின் கவலைகளைத் தணிக்கப் போதுமான நடவடிக்கைகளை தற்போது வரை எடுக்கவில்லை என்று குறிப்பிட்டார். அதே போல ‘ வரவிருக்கும் பொருளாதார பேரழிவை தவிர்க்க மோடியால் எதையும் செய்ய இயலாது. அவர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கட்டுப்பாட்டில் இயங்குகிறார் என்று ராகுல் காந்தி பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்துள்ளார்.

Related Stories: