ஐ.பெரியசாமி பிறந்தநாள் விழா முன்னாள் எம்எல்ஏ சீ.வெ.கிருஷ்ணன் பங்கேற்பு

குஜிலியம்பாறை, ஜன.7: திமுக துணை பொதுச் செயலாளரும், ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பெரியசாமியின் 68வது பிறந்த நாள் விழா நேற்று திண்டுக்கல்லில் கொண்டாடப்பட்டது. முன்னதாக திண்டுக்கல்லில் உள்ள அண்ணா சிலைக்கு மற்றும் கலைஞரின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து ஐ.பெரியசாமி மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து திமுக தலைமை அலுவலகத்திற்கு சென்ற அவருக்கு கட்சி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர். இதில் வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி முன்னாள் எம்எல்ஏவும், குஜிலியம்பாறை ஒன்றிய முன்னாள் திமுக செயலாளருமான சீ.வெ.கிருஷ்ணன் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தார்

Related Stories: