ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் இறுதிச் சுற்றில் சின்னர்

டுரின்: இத்தாலியில் ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் ஆடவர் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த ஆடவர் ஒற்றையர் அரை இறுதிப் போட்டியில் இத்தாலியை சேர்ந்த உலகின் 2ம் நிலை வீரர் ஜேனிக் சின்னர், ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டிமினார் உடன் மோதினார்.

துவக்கம் முதல் ஆதிக்கம் செலுத்திய சின்னர், முதல் செட்டை 7-5 என்ற புள்ளிக் கணக்கில் வசப்படுத்தினார். தொடர்ந்து நடந்த 2வது செட்டில் அட்டகாசமாக ஆடிய சின்னர், அந்த செட்டையும் 6-2 என்ற புள்ளிக் கணக்கில் எளிதில் கைப்பற்றினார். அதனால் 2-0 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிவாகை சூடிய அவர் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

Related Stories: