மல்லசமுத்திரம், நவ.13: திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மல்லசமுத்திரம் கிளையில், நேற்று பருத்தி ஏலம் நடந்தது. இதில் மங்களம், பள்ளக்குழி அக்ரஹாரம், செண்பகமாதேவி, ராமாபுரம், பருத்திபள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் 60 கிலோ எடை கொண்ட, 80 மூட்டை பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில், பி.டி., ரகம் பருத்தி குவிண்டால் ரூ.6099 முதல் ரூ.7699 வரையும், கொட்டு ரகம் ரூ.3929 முதல் ரூ.5519 வரை என மொத்தம் ரூ.1.66 லட்சத்திற்கு ஏலம் போனது. அடுத்த ஏலம் வருகிற 19ம் தேதி நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரூ.1.66 லட்சத்திற்கு பருத்தி விற்பனை
- மல்லசமுத்திரம்
- திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம்
- மங்கலம்
- பல்லக்குழி அக்ரஹாரம்
- செண்பகமாதேவி
- ராமபுரம்
- பருத்திப்பள்ளி
