*ரூ.36.50 லட்சம் செலவில் அமைகிறது
நாகர்கோவில் : நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட சாலையில் எல்லை பதாகைகள் அமைக்கப்பட உள்ளன. மாநகராட்சிக்குட்பட்ட ஒழுகினசேரி பாலம் அருகே, சுங்கான்கடை திருவனந்தபுரம் செல்லும் சாலை மற்றும் கன்னியாகுமரி செல்லும் சாலை ஆகிய இடங்களில் முதற்கட்டமாக ரூ.36.50 லட்சம் மதிப்பீட்டில் எல்லை பதாகைகள் அமைக்கப்படுகின்றன. இந்த பணிகளை மேயர் மகேஷ் நேற்று தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா, மண்டல தலைவர்கள் ஜவஹர், செல்வகுமார், கவுன்சிலர்கள் ஆச்சியம்மாள், சுனில்குமார், அக்சயா கண்ணன் உதவி செயற்பொறியாளர் ரகுராமன், இளநிலை பொறியாளர் தேவி, திமுக மாநகர அவைத்தலைவர் பன்னீர் செல்வம், நிர்வாகிகள் வட்ட செயலாளர் ராஜேஷ்குமார், சிவக்குமார், ஜனார்த்தன், தன்ராஜ், செல்லம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
