முத்துப்பேட்டையில் போதையில் நின்று தகராறில் ஈடுபட்ட வாலிபர் கைது

முத்துப்பேட்டை, நவ. 6: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை காவல் நிலையம் எதிரே உள்ள அரசு மருத்துவமனைக்கு செம்படவன்காடு ஊமை கொல்லை தாவூது நகரை சேர்ந்தவர் விமலநாதன் (23). இவர் காலில் அடிப்பட்டு சிகிச்சைக்காக வந்தார். அப்போது கடும் குடிபோதையில் இருந்ததால் மருத்துவமனை எதிரே நின்று சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மற்றும் பொதுமக்களை ஆபாசமாகவும், தகராத வார்த்தைகளாலும் பேசி ரகளையில் ஈடுபட்டார்.

தகவலறிந்த அங்கு சென்ற சப்.இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், வாலிபரை பிடித்து முத்துப்பேட்டை காவல் நிலையம் அழைத்து வந்து புகார் செய்தார். வழக்கு பதிவு செய்த சப்.இன்ஸ்பெக்டர் ராகுல் ரகளையில் ஈடுபட்ட விமலநாதன் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

 

Related Stories: