தாட்கோ மூலம் ‘டாட்டூ’ பயிற்சி

மதுரை, நவ. 1:தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி, தற்போது ஒப்பனை, அழகுக்கலை மற்றும் பச்சை குத்துதல் போன்ற பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது. இப்பயிற்சியினை பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவை சார்ந்த 8ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்த 18 முதல் 35 வயதிற்குள் இருப்பவர்கள் தகுதி உடையவர்களாவர்.

குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். திருச்சி மாவட்டத்தில் 90 நாட்கள் வழங்கப்படும் பயிற்சியின் போது, தங்குமிடத்திடத்திற்கான செலவு தாட்கோவால் வழங்கப்படும். பயிற்சியின் நிறைவில் தகுதியான நபர்கள் பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலமாக தேர்வு செய்யப்பட்டு ஆரம்ப கால மாத ஊதியமாக ரூ.15 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை வருவானம் ஈட்டும் வகையில் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். இப்பயிற்சியில் சேர தாட்கோ இணையதளத்தில் www.tahdco.com என்ற தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

 

Related Stories: