வாரணாசியில் பொது இடத்தில் எச்சில் துப்பினால் ரூ.250 அபராதம் :மாநகராட்சி அதிரடி

வாரணாசி: ‘பொது இடத்தில் எச்சில் துப்பினால், 250 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்’ என உத்தர பிரதேசத்தின் வாரணாசி மாநகராட்சி அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள வாரணாசி லோக்சபா தொகுதியில் தான் பிரதமர் மோடி போட்டியிட்டு வென்றார். மாநகராட்சியான வாரணாசியை சுத்தமாக வைத்திருக்கும் வகையில், திடக்கழிவு மேலாண்மை மற்றும் சுகாதார விதிகளை மாநகராட்சி நிர்வாகம் புதிதாக அமல்படுத்தியுள்ளது.

வாரணாசி நகராட்சியின் பொதுமக்கள் தொடர்பு அதிகாரி சந்தீப் ஸ்ரீவாஸ்தவா,”உத்தர பிரதேச திடக்கழிவு மேலாண்மை மற்றும் சுகாதார விதிகள் (2021) வாராணசியில் அமலுக்கு வந்துள்ளது. இதன்படி, பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.250, வாகனங்களில் இருந்தபடி குப்பையை வீசினாலோ எச்சில் துப்பினாலோ ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும். இதுபோல சாலையில் சுற்றித் திரியும் பிராணிகளுக்கு உணவுப் பொருள் வழங்கினால் ரூ.250, பூங்கா, சாலை உள்ளிட்ட பொது இடங்களில் குப்பை கொட்டினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும். நீர்நிலைகளில் குப்பைகளை கொட்டினால் ரூ.750, குப்பைகளை மூடப்படாத லாரிகளில் எடுத்துச் சென்றால் ரூ.2,000 அபராதம் விதிக்கப்படும்,” என்றார்.

Related Stories: