வேதாரண்யத்தில் மாமன்னர் மருது பாண்டியர், பசும்பொன் தேவர் குருபூஜை விழா உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை

 

வேதாரண்யம், அக்.29: வேதாரண்யத்தில் மாமன்னர் மருது பாண்டியர்களின் 224 வது குருபூஜை மற்றும் பசும்பொன் தேவர் 118 வது குருபூஜை விழா முன்னிட்டு வேதாரண்யம் ராஜாஜி பூங்கா எதிரில் திருவுருவ படங்கள்வைக்கப்பட்டு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தனர். நிகழ்ச்சிக்கு கருப்பம்புலம் தொழிலதிபர் பி.வி.கே பிரபுதலைமை வகித்து, மாமன்னர் மருது பாண்டியர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவிமரியாதை செய்தார். நிகழ்ச்சியில் மூவேந்தர் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த செந்தில், மாது, நாகராஜன் மாரியப்பன் திருநாவுக்கரசு லட்சுமணன் ஹரி, உள்ளிட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

 

Related Stories: