அரியலூர், அக்.24: அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவ மழையின் போது பேரிடர் தொடர்பாக பொதுமக்கள் தொடர்பு கொள்ள 24 மணி நேரமும் செயல்படக்கூடிய பேரிடர் கால கட்டுப்பாட்டு மையத்தில் கண்காணிப்பு அலுவலர், கலெக்டர் ஆய்வு செய்தனர். அரியலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் விஜயலெட்சுமி, கலெக்டர் ரத்தினசாமி முன்னிலையில் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க மாநிலம் முழுவதும் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதில், அரியலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை கலெக்டர் ரத்தினசாமி அரசு அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.
அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவ மழையின் போது பேரிடர் தொடர்பாக பொதுமக்கள் தொடர்பு கொள்ள 24 மணி நேரமும் செயல்படக்கூடிய பேரிடர் கால கட்டுப்பாட்டு மையத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குநர் விஜயலெட்சுமி, கலெக்டர் ரத்தினசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
