பெய்ஜிங்: ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு கூட்டம் கடந்த திங்களன்று தொடங்கியது. நான்கு நாட்கள் நடந்த இந்த கூட்டம் நேற்று நிறைவடைந்தது. இந்த கூட்டத்தில், அமெரிக்க அதிபர் டிரம்பின் வரிவிதிப்பு நடவடிக்கையால் ஏற்பட்டு வரும் தாக்கத்தையும், அதன் விளைவாக ஏற்படும் உலகளாவிய வர்த்தக பதற்றங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இதன் மூலமாக சீனா பாதிக்கப்படாமல் தடுப்பதற்கு மிகவும் மீள்தன்மை கொண்ட உள்நாட்டு சந்தையை உருவாக்குவதற்கும் அதிக தன்னம்பிக்கையை அடைவதற்கும் ஒரு புதிய ஐந்து ஆண்டு திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. உயர் ராணுவ அதிகாரிகள் அளவிலான சீர்திருத்தத்துக்கும் கூட்டம் ஆதரவளித்துள்ளது. மேலும், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மற்றும் சக்தி வாய்ந்த ராணுவத்தின் முக்கிய தலைமையாக அதிபர் ஜி ஜின்பிங்கை உறுப்பினர்கள் மீண்டும் உறுதிபடுத்தினார்கள்.
