பாவூர்சத்திரம், அக். 24: கீழப்பாவூர் வடக்கு ஒன்றிய திமுக பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம், மகிழ்வண்ணநாதபுரத்தில் நடைபெற்றது. ஒன்றிய பொறுப்பாளர் பொன்செல்வன் தலைமை வகித்தார். தலைமை செயற்குழு உறுப்பினர் பிரபாகரன் கலந்து கொண்டு வாக்குச் சாவடிகளுக்கு பாக முகவர் குறிப்பேடு புத்தகத்தை வழங்கி பேசினார். கூட்டத்தில் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி பார்வையாளர் கணேஷ்குமார் ஆதித்தன், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் செல்வ சூடாமணி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் பிரேம் ஆனந்த், ஒன்றிய துணை செயலாளர் மகாலட்சுமி, ஒன்றிய பொருளாளர் அன்பரசு, மாவட்ட பிரதிநிதிகள் முத்துராஜ், பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திமுக பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம்
- திமுக
- முகவர்கள்
- பவுர்ச்சத்திரம்
- Keelappavur
- வடஒன்றியம்
- சந்தித்தல்
- மேகவன்நாதபுரம்
- பொன்செல்வன்
- பிரபாகரன்
