பொன்னமராவதியில் தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை

பொன்னமராவதி,அக்18: பொன்னமராவதியில் தூய்மைப்பணியாளர்களுக்கு புத்தாடை வழங்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பேரூராட்சியில் பணிபுரியும் தற்காலிக தூய்மைப்பணியாளர்களுக்கு பொன். புதுப்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் புத்தாடை வழங்கும் விழாவிற்கு ரோட்டரி சங்கத்தலைவர் சுதாகரன் தலைமைவகித்தார். முன்னாள் தலைவர் ரமேஷ், பேராசிரியர் குமாரசாமி ஆகியோர் முன்னிலைவகித்தனர். இதனைத்தொடர்ந்து தூய்மை பணியாளர்களுக்கு சேலை வழங்கப்பட்டது. இதில் ரோட்டரி சங்க நிர்வாகிகள், தூய்மை பணியாளர்கள் பங்கேற்றனர்.

 

Related Stories: