உடையார்பாளையம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

ஜெயங்கொண்டம் அக்.18: உடையார் பாளையம் அரசு மகளிர்மேல் நிலைப்பள்ளியில் மாவட்ட புகையிலை தடுப்பு அலகு சார்பில் புகையில்லா இளைய சமூதாய விழிப்புணர்வு 3.0 நடைபெற்றது. நிகழ்வில், தலைமையாசிரியர் முனைவர் முல்லைக்கொடி தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் இங்கர்சால் வரவற்றார். புகையிலை தடுப்பு ஆலோசகர் வைஷ்ணவி கலந்து கொண்டு புகையிலை சார்ந்த பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் வாய்புற்று நோய், மூளைபற்று நோய், உடலில் வெவ்வேறு வகையான புற்றுநோய்கள் வரும், மாணவிகள் தங்கள் வீட்டில் உள்ளவர்கள் புகையிலை பயன்படுத்துவதை தவிர்க்கவேண்டும் என விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

மேலும், புகையிலை தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை தலைமையாசிரியர் கொடியசைத்து தொடங்கி வைத்தார் மாணவிகள். கையில் பாதாகைகளை ஏந்தி புகையிலை தீமை வாசகங்களை கோஷமிட்டு முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளி வந்தடைந்தனர், நிகழ்வில், சுகாதார ஆய்வாளர்கள் ஞானபிரகாசம், மோகன்ராஜ், ஆசிரியர்கள் செல்வராஜ், மஞ்சுளா,அமுதா பூசுந்தரி, பாவைசங்கர், இராஜசேகரன், சங்கீதா தமிழாசிரியர் இராமலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர், நிகழ்வை உடற்கல்வி ஆசிரியர் ஷாயின்ஷா ஒருங்கிணைத்தார்.

 

Related Stories: