பென்னாகரம்: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட சென்னையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார். சென்னை ஆர்.கே.நகர் தண்டையார்பேட்டையை சேர்ந்தவர் சாமிநாதன் மகன் பிரபு (38), ஆட்டோ டிரைவர். இவர் நேற்று தனது நண்பர்கள் 10 பேருடன் ஒகேனக்கலுக்கு சுற்றுலா வந்துள்ளார். ஒகேனக்கல்லில் பல்வேறு இடங்களை சுற்றி பார்த்த பின்னர் நண்பர்களுடன் கோத்திக்கல் காவிரி ஆற்றில் குளித்தார். அப்போது பிரபு ஆழமான பகுதிக்கு சென்றுள்ளார். நீச்சல் தெரியாததால் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார். நண்பர்கள் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. உடனடியாக அருகிலிருந்தவர்கள் ஒகேனக்கல் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட பிரபுவை சடலமாக மீட்டனர். பின்னர், பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த பிரபுவிற்கு கல்பனா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.
ஒகேனக்கல் காவிரியில் மூழ்கி சென்னை ஆட்டோ டிரைவர் பலி
- சென்னை
- ஒகேனக்கல் காவிரி
- பென்னாகரம்
- காவிரி
- Okenakkal
- பிரபு
- சாமிநாதன்
- தண்டையார்பேட்டை, ஆர்.கே.நகர், சென்னை
