எனக்கு பாம்பு காது: சபாநாயகர் நகைச்சுவை

சென்னை: சட்டப்பேரவையில் நேற்று கடலூர் மாவட்டத்தில் மின்னல் தாக்கி 4 பேர் இறந்தது தொடர்பாக அரசின் கவனத்தை ஈர்த்து உறுப்பினர் வேல்முருகன் (தவாக) பேசினார். முன்னதாக இந்த பிரச்னை குறித்து அதிமுக சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் பேச முயன்றார். அப்போது பதிலளித்த சபாநாயகர், ‘நீங்கள் பேசுகின்ற கருத்தை வேல்முருகன் பேசி விட்டார். அதற்கு அமைச்சரும் பதில் அளித்து விட்டார்’ என்றார். அப்போது அதிமுக தரப்பு எம்எல்ஏக்கள் சிலர் சபாநாயகர் பேச்சு குறித்து தங்களுக்குள் பேசினர். அப்போது பதிலளித்த சபாநாயகர் அப்பாவு, ‘எனக்கு பாம்பு காது. நீங்கள் என்ன பேசினாலும் எனக்கு கேட்கும்’ என்று நகைச்சுவையாக கூறினார். அவரின் பேச்சை கேட்டு அதிமுக உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவரும் சிரித்தனர்.

Related Stories: