சட்டீஸ்கரில் ஒரேநாளில் 210 நக்சலைட்டுகள் சரண்

ஜக்தால்பூர்: சட்டீஸ்கரில் மாநிலத்தில் சமீபகாலமாக நக்சலைட்டுகளின் தாக்குதலை பாதுகாப்பு படையினர் முறியடித்து வருகின்றனர். நக்சலைட்டுகளுக்கு எதிரான தீவிர வேட்டை நடத்தப்பட்டு. கடந்த ஆண்டுகளில் நடந்த என்கவுன்டர்களில் 200-க்கும் மேற்பட்ட நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இந்த நிலையில் ஜக்தால்பூரில் நேற்று ஒரே நாளில் 210 நக்சலைட்டுகள் போலீசில் சரண் அடைந்தனர்.பஸ்தார் மாவட்ட தலைநகர் ஜக்தால்பூர் போலீஸ் கமாண்டன்ட் அலுவலகத்தில் நடந்த சரண் அடையும் நிகழ்ச்சி நடந்தது. ஏகே-47,எஸ்எல்ஆர்., இன்சாஸ் ரைபிள்கள் உள்ளிட்ட 153 ஆயுதங்களை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Related Stories: