தி.க., ஆர்ப்பாட்டம்

தர்மபுரி, அக்.18: தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு திக சார்பில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது செருப்பு வீச்சை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் தமிழ்பிரபாகரன் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில், திக மாவட்ட தலைவர்கள் சரவணன், தமிழ்செல்வன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் செல்லதுரை ஆகியோர் பேசினர். நிர்வாகிகள் கருணாநிதி, ராஜேந்திரன், வக்கீல் பிரின்சு, இளைய.மாதன், பரமசிவன், கதிர், கதிர்.செந்தில்குமார், கிருஷ்ணமூர்த்தி, அன்பரசு மற்றும் பலர் கலந்து கொண்டனர். மாவட்ட செயலாளர் தங்கராஜ் நன்றி கூறினார்.

Related Stories: