திருத்தணியில் அதிமுக 54வது ஆண்டு தொடக்க விழா

திருத்தணி, அக்.18: அதிமுக 54வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, திருத்தணியில் அதிமுக அமைப்பு செயலாளர், முன்னாள் எம்பி திருத்தணி கோ.அரி தலைமையில் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா உருவச் சிலைகளுக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. அதிமுக நிர்வாகிகள் ஜெயசேகர் பாபு, கேபிள் சுரேஷ், வேலஞ்சேரி பழனி, காசிநாதபுரம் கோதண்டன், சத்தியமூர்த்தி, நீலகண்டன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அதேபோல், பொதட்டூர்பேட்டை பேருந்து நிலையில் பேரூர் அதிமுக செயலாளர், பேரூராட்சி தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில், எம்ஜிஆர் உருவ சிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. அதிமுக நிர்வாகிகள் டி.வேலு, டி.எஸ்.குமார், சக்கரப்பன், சுகாசினி ஞானசேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: