சென்னை: 14 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி இரட்டை இலக்கத்தை எட்டியுள்ளது என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். நாம் திட்டமிட்டதைவிட பொருளாதாரம் 2% கூடுதலாக வளர்ச்சி அடைந்துள்ளது. இதற்கு முன்னதாக கலைஞர் ஆட்சியில்தான் இரட்டை இலக்க வளர்ச்சி பெற்று இருந்தோம். நிதி வழங்குவதில் ஒன்றிய அரசு தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது என அவர் தெரிவித்தார்.
