நெல்லை மாநகராட்சியில் சுற்றி திரிந்த 30 மாடுகள் கோசாலையில் அடைப்பு

நெல்லை, டிச. 29: நெல்லை மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து இடையூறாக சாலைகளில் மாடுகள் திரிவதாக அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. நெல்லை மாநகராட்சி கமிஷனர் கண்ணன், மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா உத்தரவின் பேரில் 4 மண்டலங்களிலும் நேற்று அதிகாரிகள் களமிறங்கினர். மண்டல சுகாதார அலுவலர்கள் பாளை சாகுல்ஹமீது, நெல்லை முருகேசன், தச்சை அரசகுமார் ஆகியோர் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் இளங்கோ, நடராஜன், பெருமாள் மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்கள் தெருக்களில் சுற்றி திரிந்த மாடுகளை பிடித்து மண்டல அலுவலகம் கொண்டு வந்தனர். தச்சநல்லூர் மண்டலத்தில் 14 மாடுகளும், பாளை மண்டலத்தில் 7 மாடுகளும், மேலப்பாளையம் மண்டலத்தில் 4 மாடுகளும், டவுன் மண்டலத்தில் 5 மாடுகளும் சேர்த்து மொத்தம் 30 மாடுகள் பிடிக்கப்பட்டு, அருகன்குளம் கோசாலையில் ஒப்படைக்கப்பட்டன. மாட்டின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட உள்ளது.

Related Stories: