சின்னமனூர் பகுதியில் சாரல் மழை

 

சின்னமனூர், அக். 10: சின்னமனூரில் நேற்று 3 மணிக்கு மேல் தொடங்கிய சாரல் மழை இரவு வரை பெய்து வருகிறது. அதே போல் சின்னமனூரை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. ஏற்கனவே வடகிழக்கு பருவமழை துவங்கி தீவிரமடைந்து இருப்பதால் அடுத்தடுத்து மழை பெய்யும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் இருக்கின்றனர். சின்னமனூர் சீப்பாலப்பேட்டை சாலையிலும், மார்க்கையன்கோட்டை ரவுண்டானா பிரிவிலும், நேருஜி பஸ் நிலையம் அருகிலும், பழைய பாளையம் ரோடு பகுதிகளிலும் சாலையில் மழை நீர் ஓடியது.

Related Stories: