உடனே அகற்ற பொதுமக்கள் கோரிக்கை அரவக்குறிச்சி குமரண்டான் வலசில் திமுக கிராமசபை கூட்டம்

அரவக்குறிச்சி, டிச.25: அரவக்குறிச்சி குமரன்டான் வலசில் அதிமுகவை நிராகரிப்போம் என்ற தலைப்பில் திமுக கிராமசபை கூட்டம் நடைபெற்றது. அரவக்குறிச்சி மேற்கு ஒன்றிய செயலாளர் எம்எஸ் மணியன், கிழக்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன் ஆகியோர் வரவேற்று பேசினர். சிறுபான்மை பிரிவு செயலாளர் முனவர் ஜான், விவசாயப் பிரிவு செயலாளர் மண்மாரி உதயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதிய வேளாண் சட்டத்தால் அதனை அதிமுக அரசு ஆதரிப்பதால் விவசாயிகளை வஞ்சிப்பது, நாட்டில் பொதுமக்கள் வேலை இல்லாமல் தவிப்பது, சமூக நீதியை காக்கப்படாமல் இருப்பது, திமுக ஆட்சியில் இருந்த விவசாய வளர்ச்சி தற்போது, அதிமுக ஆட்சியில் குறைந்து விட்டது. இதுபோன்ற பல்வேறு காரணங்களால் மக்கள் அவதிப்படுகின்றனர். ஆகையால் அதிமுகவை நிராகரிப்போம். திமுக ஆட்சிக்கு வந்தால் இக்குறைகளெல்லம் இல்லாமல் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று அங்கு கூடியிருந்த பொதுமக்களுக்கு விளக்கிக் கூறப்பட்டது. இக்கூட்டத்தில் ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

கடவூர்: கடவூர் ஒன்றியத்தில் அதிமுகவை நிராகரிப்போம் என்ற தலைப்பில் கிராம சபை கூட்டம் நடந்தது. இதில் தெற்கு ஒன்றியம் சார்பில் பாலவிடுதி நடந்த கிராம சபைக் கூட்டத்திற்கு ஒன்றிய பொறுப்பாளர் சுதாகர் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் துரைராஜ், துணை ஒன்றிய செயலாளர் தமிழ் பொன்னுச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அவைத்தலைவர் வெங்கடசாமி வரவேற்றார். இதில் அதிமுக அரசின் எதிர்ப்போம் என்ற தலைப்பில் பொதுமக்களிடம் தங்கள் பகுதியில் உள்ள குறைகள் மற்றும் தேவைகள் குறித்து கேட்டறிந்தனர். இதேபோல் வடக்கு ஒன்றியம் சார்பில் சுண்டுக்குழிபட்டியில் ஒன்றிய பொறுப்பாளர் ராமலிங்கம் தலைமையில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

Related Stories: