செஞ்சி, செப். 25: விழுப்புர மாவட்டம் செஞ்சி அடுத்த நல்லாண்பிள்ளைபெற்றாள் ஊரை சேர்ந்தவர் மனோகரன். இவரது மனைவி செந்தமிழ்செல்வி (62). இவர் கடந்த 14ம் தேதி காலை திருவண்ணாமலையிலிருந்து சென்னை செல்லும் அரசு பஸ்சில் பயணம் செய்து கடலாடிகுளம் கூட்ரோட்டில் இறங்கினார். அப்போது தன் பையை பார்த்தபோது அதில் வைத்திருந்த 4.25 பவுன் தங்க நெக்லஸ் மற்றும் ரூ.300 பணத்தை காணவில்லை. இதுகுறித்து நல்லாண்பிள்ளைபெற்றாள் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பஸ்சில் பயணம் செய்த பெண்ணிடம் நகை திருட்டு
- Senchi
- மனோகரன்
- நல்லன்பிள்ளைபெர்டல் கிராமம்
- விழுப்புரம் மாவட்டம்
- செந்தமிழ் செல்வி
- திருவண்ணாமலை
- சென்னை
- கடலாடிகுளம் கூரோடு.…
