கீழ்வேளூர், செப்.25: நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் ஆந்தக்குடி, சிகார், கோவில்கண்ணாப்பூர், கூரத்தாங்குடி ,ஆதமங்கலம் ஆகிய 5 ஊராட்சிகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட 2-வது சிறப்பு முகாம் ஆந்தக்குடியில் நடைபெற்றது. முகாமில் பொது மக்களிடம் இடமிருந்து மகளிர் உரிமை தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 994 மனுக்கள் பெறப்பட்டன.
கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி, கீழ்வேளூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளரும், வட்டார ஆத்மா குழு தலைவர் கோவிந்தராசன், கீழ்வேளூர் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பழனியப்பன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரேவதி ,சரவணன் வட்டாட்சியர் கவிதாஸ் , சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் ராஜசேகரன், வட்ட வழங்கல் அலுவலர் சந்திரகலா, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராணி, ஜீவா ஊராட்சி செயலாளர்கள் சத்யநாராயணன், அருண் குமார். கதிரவன், பாலமுருகன் மற்றும் அரசு துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
